நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

மே 5ம் தேதி நீட் தேர்வுநடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வரும் 15ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்கொண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 

இந்நிலையில், 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 15ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை https://www.nta.ac.in/ அல்லது https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspxஎன்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச் சீட்டு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டார்கள். எனவே, குறித்த நேரத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொண்டு, தங்களுடைய சுய விபரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

RELATED STORIES