தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் சிறப்பு பயிற்சி முகாம்கள் அறிவிப்பு

கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகளிடம் அஞ்சல் தலைகள் சேகரிப்பதை குறித்த திறனாய்வு பயிற்சி முகாம்களை ஏற்று நடத்த தபால் துறையின் அஞ்சல் தலை சிறப்பு பிரிவு முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டவுள்ள அறிக்கையில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணக்கார்களுக்கு இந்த திறனாய்வு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. அதில், அஞ்சல் தலைகளை சேகரிப்பதை குறித்த புத்தகங்கள் உருவாக்குவது, கண்காட்சியை நடத்துவது மற்றும் அஞ்சல் தலைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பது குறித்தான நுணுக்கங்கள் கற்றுத்தரப்படவுள்ளன. 

இந்த பயிற்சி வகுப்புகளில் மேல்நிலை கல்வி பயின்று வரும் விரும்பமுள்ள மாணவர்களும் சேரலாம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படும். 

தவிர, பகுதி பகுதியாக செவ்வாய் முதல் வியாழன் வரை முகாம்கள் செயல்படும். அதில் முதல் பகுதி ஏப்ரல் 23 முதல் 25 அரையும், அடுத்த பகுதி மே 30 வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED STORIES