பிரபல பொம்பை கம்பெனியை வாங்கியது ரிலையன்ஸ்

250 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ்இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. 

மத்திய லண்டனில் ரெகெண்ட் சாலையில் உள்ள ஹாம்லேஸ் பொம்மை நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. 1760-ம் ஆண்டு தொடங்கபப்ட்ட இந்நிறுவனம் இந்தியா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என 18 நாடுகளில் 167 கடைகளுடன் இயங்கி வருகிறது. 

இந்தியாவிலும் 29 நகரங்களில் 88 ஹாம்லேஸ் கடைகள் உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 200 கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஹாம்லேஸ் கடைகளில் வர்த்தக விவகாரத்தை கவனித்துக்கொள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது. 

இந்நிலையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறது என்பது பற்றி ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து விவரம் இல்லை. ஆனால், 67.96 மில்லியன் பவுண்டு (ரூ.621.15 கோடி) விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுடென்டோ நிறுவனத்தின் வசம் இருந்த ஹாம்லேஸ் நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த சி பேனர் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது. 

இந்தியச் சந்தையில் பொம்மை விற்பனை மதிப்பு 2018-ம் ஆண்டு 150 கோடி டாலராக இருந்தது. 2011 முதல் 2018 வரையான காலத்தில் 15.9% வளர்ச்சி கண்டுள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியாவில் பொம்மை விற்பனை மதிப்பு 303 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பொம்மை விற்பனையிலும் கோலோச்சும் திட்டத்தை ரிலையன்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. 

RELATED STORIES