ஜப்பான் கியூஷு தீவில் இரட்டை நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

டோக்கியோ: ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷு தீவில் தென் கிழக்கே உள்ள மியாசக்கி ஷூகி என்ற இடத்தை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. 

மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கடலுக்கு அடியில் 44 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. 

இந்த இரு நிலநடுக்கங்களால் கட்டங்கள் அதிர்ந்தன. இதுவரை உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை.

RELATED STORIES